காவல்துறை மரியாதையுடன் டிஐஜி விஜயகுமார் உடல் தகனம்!

தமிழகம்

மறைந்த டிஐஜி விஜயகுமார் உடல் காவல்துறை மரியாதையுடன் இன்று (ஜூலை 7) தகனம் செய்யப்பட்டது.

கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணிபுரிந்த வந்த விஜயகுமார் கோவை ரேஸ் கோர்ஸ் முகாம் அலுவலகத்தில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் வழக்கும் போல் நடைப்பயிற்சி சென்று வந்த விஜயகுமார் பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது தமிழக காவல்துறையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி கொண்டு வரப்பட்ட விஜயகுமாரின் உடலுக்கு அமைச்சர்கள் சாமிநாதன், பெரியசாமி, டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். காவல்துறையின் உயர் அதிகாரிகள் பலரும் நேரில் வந்து கண்ணீர் மல்க இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

இறுதிச்சடங்குகள் நிறைவு பெற்ற பிறகு ரத்தினம் நகர் பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேனி அல்லி நகராட்சிக்குட்பட்ட எரிவாயு மயானத்தை நோக்கி இறுதி ஊர்வலம் தொடங்கியது. முன்னதாக டிஜிபி சங்கர் ஜிவால் விஜயகுமாரின் உடலை தோளில் சுமந்து கொண்டு சென்று ஊர்தியில் ஏற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 6.30 மணியளவில் மயானத்தை அடைந்த பிறகு 21 குண்டுகள் முழங்க விஜயகுமாரின் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் 6.50 மணியளவில் விஜயகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மோனிஷா

கலைஞர் பெயரில் மகளிர் உரிமைத் தொகை திட்டம்!

டிஐஜி தற்கொலை: சிபிஐ விசாரணை கோரும் அரசியல் கட்சிகள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *