“சத்யாவை கொல்ல 10 நாள் திட்டம்” – கொலையாளி சதீஷ் திகில் வாக்குமூலம்!

தமிழகம்

சென்னை பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி  கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13 ஆம் தேதி சத்யா என்ற கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை வழக்கு தொடர்பாக சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாணவி சத்யா கொல்லப்பட்ட நிலையில் மகள் இறந்த சோகத்தில் கடந்த 14 ஆம் தேதி சத்யாவின் தந்தை மாணிக்கமும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கை தமிழக டிஜிபி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.

காதலிக்க மறுத்ததால் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் சதீஷ் வாக்குமூலம் அளித்திருந்தார்.

didnt think Sathya would die Confession of killer Sathish

இருப்பினும் கொலையை எவ்வாறு திட்டம் தீட்டி செயல்படுத்தினார் என்பது குறித்து விரிவான விசாரணை செய்வதற்காக சிபிசிஐடி போலீசார் நேற்று(அக்டோபர் 27) சதீஷை ஒரு நாள் காவலில்  எடுத்து விசாரித்தனர்.

அப்போது சத்யாவும் தானும் இரண்டு வருடங்களாக காதலித்ததாக சதீஷ் தெரிவித்துள்ளார்.  

தங்களது காதலுக்கு சத்யாவின் தாய் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், உறவினர் ஒருவரை சத்யாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால் பிரச்சனை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சத்யாவை தன்னுடன் பேசக்கூடாது என தாய் கூறியதால், சத்யா தன்னிடம் பேசாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பலமுறை பேச முயற்சித்தும் சத்யா பேசாமல் தன் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்து பத்து நாட்கள் பின் தொடர்ந்து சென்று கொலை செய்ய திட்டமிட்டதாக சதீஷ் தெரிவித்துள்ளார்.

didnt think Sathya would die Confession of killer Sathish

சத்யாவை கொலை செய்ய திட்டம் தீட்டினாலும், காதலித்த பெண் என்ற காரணத்தினால் கொலை செய்ய மனம் வராமல் தினமும் திரும்பிச் சென்றதாக அவர் போலீசிடம் தெரிவித்துள்ளார்.

கொலை செய்த தினத்தன்று தன்னையும் அறியாமல் குழப்ப மனநிலையில் சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டதாகவும், உண்மையில் கொலை செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அவர் இறந்துவிடுவார் என்று நினைக்கவில்லை எனவும் சிபிசிஐடி போலீசாரிடம் சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கலை.ரா

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி விநாயகர் – கெஜ்ரிவால் கோரிக்கையின் பின்னணி!

பிரக்னன்சி கிட்: ரசிகர்களை குழப்பிய நடிகைகள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *