பெட்ரோல் குண்டு வீச்சு : கோவைக்கு விரைகிறார் டிஜிபி சைலேந்திர பாபு

பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களை நேரில் ஆய்வு செய்வதற்காக டி.ஜி.பி சைலேந்திர பாபு இன்று (செப்டம்பர் 25) கோவைக்கு விரைந்துள்ளார்.

என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு கோவையில் கடந்த 2 நாட்களாக பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் கார் எரிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீசாருடன் அதிரடி படை மற்றும் கமாண்டோ படையினரும் கோவையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காலியாக இருந்த கோவை மாநகர உளவுத் துறை உதவி ஆணையாளர், சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளர் போன்ற பதவிகளுக்கு அதிகாரிகளை நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களை நேரில் ஆய்வு செய்வதற்காக டி.ஜி.பி சைலேந்திர பாபு இன்று கோவைக்கு விரைந்துள்ளார்.

மேலும் அசாம்பாவிதங்கள் நேராமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

20 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஒயிட் வாஷ்’: இந்திய மகளிர் அணி செய்த தரமான சம்பவம்!

உஷாரய்யா உஷாரு… டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts