காவல்துறையில் ஆறு மாதங்களுக்கு பிறகு தான் காலிப்பணியிடங்கள் வரும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வெலிங்டன், உதகை காவல் நிலையங்களை டிஜிபி சைலேந்திரபாபு இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திரபாபு, “உதகையில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையம் சார்பில் காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு காவலர்களுக்கு பழங்குடியினர் சான்று மற்றும் குற்றங்களை கையாள்வது குறித்து இரண்டு நாள் பயிற்சி கொடுக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்திய 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்.
இந்த ஆண்டு 2600 பழங்குடியின மாணவர்களுக்கு சான்றிதழ் கொடுத்துள்ளோம். இதன் மூலமாக பழங்குடியின மாணவர்கள் நீட் தேர்வு, கல்லூரிகளில் சேருவதற்கு வழிவகை செய்யப்பட்டது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “காவல்துறையில் முழு ஆட்கள் இருந்தால் தான் வேலை செய்ய முடியும். கடந்த ஆண்டு பத்தாயிரம் காவலர்களை பயிற்சி கொடுத்து பணியில் சேர்த்தோம். தற்போது 3500 காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். 2500 பேரை வேலைக்கு எடுக்க போகிறோம். இந்த ஆண்டு சப் இன்ஸ்பெக்டர் 1000 பேர் காவல்துறையில் பயிற்சி பெற்று வேலையில் சேர்ந்துள்ளனர். 600 சப் இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் உள்ளது. தற்போதைய சூழலில் காவல்துறையில் காலிப்பணியிடங்கள் இல்லை. ஆறு மாதங்கள் கழித்து தான் காலிப்பணியிடங்கள் வரும். காவல்துறையில் முதல் முறையாக முழு பலமும் இருக்கக்கூடிய சூழ்நிலை வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
விமர்சனங்களுக்கு மத்தியில் வசூலை குவித்த ‘தி கேரளா ஸ்டோரி’!
சாவர்க்கர் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றம் திறப்பா? – கொதிக்கும் கே.எஸ்.அழகிரி