உஷாரய்யா உஷாரு… டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை!

தமிழகம்

”அமேசான் கிப்ட் கார்டுகள்” என உயரதிகாரிகள், காவல்துறையினர் பெயரில் போலி எஸ்எம்எஸ், வாட்ஸ் அப் செய்திகள் வருவதாகவும், இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்..

தற்போதைய காலக்கட்டத்தில் மோசடிக்காரர்கள் பல்வேறு வழிகளில் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாக ஆன்லைன் முறையிலான மோசடி நாள்தோறும் அதிகரித்து வருகிறது. புதுபுது விதங்களில் தற்போது மோசடி செய்கின்றனர்.

DGP Shailendrababu warns of online scams

இந்நிலையில், ஆன்லைன் மோசடி குறித்து எச்சரித்துள்ள தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ”அமேசான் கிப்ட் கார்டுகள்” என செல்போன் எஸ்எம்எஸ், வாட்ஸ் அப்பில் வரும் லிங்க்குகளை தேவையின்றி மக்கள் க்ளிக் செய்ய கூடாது.

மேலும் பரிசு வென்றுள்ளதாக வரும் எஸ்எஸ்எம்களை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு மோசடிகளை அரங்கேற்றும் நபர்களை கண்டுபிடிப்பது என்பது போலீசாருக்கு பெரும் சவாலாமாக உள்ளது. இதனால் ஒவ்வொருவரும் விழிப்பாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

DGP Shailendrababu warns of online scams

மேலும், சமீபகாலமாக ”அமேசான் கிப்ட் கார்டுகள்” என உயரதிகாரிகள், காவல்துறையினர் பெயரில் பொதுமக்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் அனுப்பி மோசடி நடத்தப்பட்டு வருகிறது.

அதாவது அமேசான் கிப்ட் கார்டுகள் மூலம் உங்களுக்கு பரிசு பொருட்கள் விழுந்துள்ளது. இதனை பெற 10 பேருக்கு அனுப்ப வேண்டும். அதன்பிறகு குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என கூறப்படும். இதில் நைசாக பேசும் நபர் வங்கி கணக்கு எண்கள், ரகசிய எண்களை பெற்று பணம் பறித்து மோசடியில் ஈடுபடுவார்கள். எனவே இதுபோன்ற போலியான குறுஞ்செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

லட்சக்கணக்கில் லாபம் – பேராசை காட்டி மோசடி : இருவர் கைது!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *