ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி: டிஜிபி உத்தரவு!

தமிழகம்

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (செப்டம்பர் 11) உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பனையூர் அருகேயுள்ள ஆதித்யா ராம் மைதானத்தில் “மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில் ஏ.ஆர்.ரகுமானின் இசைநிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஆனால் போடப்பட்ட இருக்கைக்கு அதிகமான டிக்கெட் விற்பனையால் ரசிகர்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டனர். தங்கள் வாழ்நாளில் சந்தித்த மோசமான இசைநிகழ்ச்சி என்று சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், இசைநிகழ்ச்சியில் ஏற்பட்ட அனைத்து சிரமத்திற்கும் தான் பொறுப்பேற்பதாகவும், யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. நானே பலியாடாக இருந்துவிட்டு போகிறேன் என்றும், விரைவில் பாதிக்கப்பட்ட ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிப்போம் என்றும் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எனினும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜுக்கு  டிஜிபி சங்கர் ஜிவால் இன்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ACTC Events நிறுவனத்திடம் விசாரணை நடத்தவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

”கலக்கமடைந்துள்ளேன்”: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை!

செந்தில்பாலாஜி ஜாமீன்: அமலாக்கத்துறை பதில் என்ன?

 

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *