பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது தொடரப்பட்ட வழக்கில் ஜூன் 16-ஆம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு பெண் எஸ்.பி ஒருவருக்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை அளித்ததாக டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் ராஜேஷ் தாஸ் மற்றும் கண்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 70-க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாட்சியங்களிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை அனைத்தும் நிறைவடைந்த நிலையில் ஜூன் 16-ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அன்றைய தினம் குற்றச்சாட்டிற்கு உள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகியோர் நேரில் ஆஜராகவும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.
செல்வம்
ஜெயலலிதா ஆட்சி : அதிமுக – பாஜகவுக்குள் புயலை கிளப்பிய அண்ணாமலை