14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட திருவண்ணாமலை கிரிவலப்பாதையை டி.ஜி.பி. சைலேந்திரபாபு 1 மணி 52 நிமிடத்தில் ஓடி முடித்திருக்கிறார்.
திருவண்ணாமலை அண்ணமலையார் கோயிலில் கார்த்தீகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
வரும் 6-ம் தேதி மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்தநிலையில் கிரிவலம் பாதையில் பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக டிஜிபி சைலேந்திர பாபு நேற்று(டிசம்பர் 2)திருவண்ணாமலை சென்றிருந்தார்.
பொதுவாகவே உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்டவரான டிஜிபி சைலேந்திரபாபு, கிரிவலப்பாதையில் ஜாகிங் சென்றபடியே ஆய்வும் செய்தார்.
அண்ணாமலையார் கோயில் கிரிவலப்பாதை 14 கிமீ சுற்றளவு கொண்டது. இதனை கடப்பதற்கு சாதாரண மக்களுக்கு குறைந்தது 4 மணிநேரம் ஆகும்.
ஆனால் டிஜிபி சைலேந்திரபாபு இதனை 1 மணி நேரம் 52 நிமிடங்களில் ஓடி முடித்தார். அவருடன் காவலர்களும் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டனர்.
இதனை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிஜிபி, காவல்துறையில் தன்னைவிட இன்னும் வேகமாக ஓடுபவர்கள் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கலை.ரா