சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவலர்கள் பணியிட மாறுதல் பிரிவில் அமைச்சுப்பணி சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் பாண்டியராஜன். காவலர்கள் பணியிட மாற்றம் செய்வதற்கு இவர் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. DGP Office Pandiarajan suspend
இதுதொடர்பாக விசாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். விசாரணையில், பாண்டியராஜன் பணம் வாங்கிக்கொண்டு போலீஸ் டிரான்ஸ்பர் லிஸ்ட் ரெடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து டிஜிபி சங்கர் ஜிவால், பாண்டியராஜனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.