சென்னையில் 30 இடங்களில் குண்டுவெடிக்கும் என டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் வந்துள்ளது.
இன்று (டிசம்பர் 26) சென்னை காமராஜர் சாலையில் இருக்கும் டிஜிபி அலுவலகத்துக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. சென்னையில் 30 இடங்களில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் உள்பட 30 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்ததாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பகுதிகள் எல்லாம் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாகும். எனவே மெயிலில் குறிப்பிட்டிருந்த பகுதிகளுக்கு போலீசார் விரைந்துள்ளனர்.
மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களுடன் அந்தந்த இடங்களுக்கு விரைந்து தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த மிரட்டல் மெயிலால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று மும்பையில் உள்ள ஆர்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இந்தியளவில் அதிக விற்பனை: உங்க பேவரைட் பைக் லிஸ்ட்ஸ் இருக்கா?
எண்ணூர் வாயு கசிவு… தொழில்நுட்ப குழு அமைப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம்!