பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள வியாபாரிகளின் மனுக்களை விரைந்து முறையாக விசாரித்து அனுமதி வழங்க அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 24) கொண்டாடப்படுவதை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் ஆங்காங்கு திறக்கப்பட்டு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு தீயணைப்பு துறைக்கு 7,021 விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், பல்வேறு காரணங்களால் தகுதியில்லாத 518 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தற்போது வரை 5,110 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன.
இது போன்ற பண்டிகை காலங்களில் விபத்துகளைத் தடுக்க தற்காலிக பட்டாசு கடைகளுக்கு கடுமையான விதிமுறைகளை அரசு அமல்படுத்தி வருகிறது.
தலைநகர் சென்னையில் மட்டும் பட்டாசு கடைகள் வைப்பதற்கு 786 விண்ணப்பங்கள் வந்துள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டத்தில் 530, சேலம் மாவட்டத்தில் 477, கோவை மாவட்டத்தில் 445,
இதில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 2,311, ஈரோடு மாவட்டத்தில் 210 என்ற எண்ணிக்கையில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
தகுதியில்லாத 518 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 1,379 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
இந்த நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
அதில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பட்டாசு கடைகள் அமைப்பதற்கும் பட்டாசுகள் விற்பதற்கும் உரிமம் வேண்டி காவல் துறையிடம் வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளார்கள்.
அவர்களின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து அரசு வகுத்துள்ள சட்ட திட்டங்களை பூர்த்தி செய்பவர்களுக்கு காலதாமதம் இன்றி பட்டாசு விற்பனை உரிமம் வழங்க வேண்டும்.
உரிமம் வழங்க தேவையின்றி காலம் தாழ்த்துவது சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பை உண்டாக்கும். மேலும் அது முறைகேட்டிற்கும் வழிவகுக்கும்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் முறையான விண்ணப்பங்களுக்கு காலம் தாழ்த்தாமல் உரிமம் வழங்க வேண்டும்.
இதில் தனி கவனம் செலுத்தி காவல் நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
-ராஜ்
அமித்ஷா பதவி விலக வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்!
அமைச்சர்களை வரவேற்க ஏற்பாடு: பேருந்து மோதி இளைஞர் பலி!