DGP alert tamilnadu police

சென்னையில் வினோத்… கடலூரில் ராதாரமணன்… காவல்துறையை அலர்ட் செய்த டிஜிபி!

தமிழகம்

தமிழக காவல்துறை தலைமை அலுவலகத்திலிருந்து அலர்ட் கிடைத்ததன் பேரில் பாஜகவினர் கொடியேற்றாத அளவிற்கு இரவும் பகலும் பம்பரம் போல் சுற்றி வருகிறார்கள் மாவட்ட, மாநகர் காவல்துறையினர்.

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டு அருகில் அனுமதி இல்லாமல் கொடியேற்ற முயற்சி செய்ததால் பிரச்சினை ஏற்பட்டு அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 25) மாலை சரித்திர பதிவேடு குற்றவாளியான கருக்கா வினோத் ஆளுநர் மாளிகையின் ஒன்றாம் எண் கேட் முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பறந்த அவசர உத்தரவு!

இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் கொடியேற்றபோவதாக அறிவித்தார்.

இதையறிந்த காவல்துறை தலைமை நேற்று இரவு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, அனைத்து ஐஜி, டிஐஜி, கமிஷனர், துணை கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிகளுக்கு அவசர உத்தரவு ஒன்றை அனுப்பினார்.

அதைத் தொடர்ந்து எஸ்பி மற்றும் மாநகர துணை ஆணையர்கள் தங்களுக்கு கீழ் உள்ள ஏசி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐகளை மைக்கில் அலர்ட் செய்தனர்.

பாஜகவினர் எங்கும் கொடியேற்றாத அளவுக்கு கண்காணித்து தடுக்க வேண்டும். இரவு மற்றும் பகல் நேரத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்.

சந்தேக படும்படி யாராவது பெட்ரோல் வாங்கி கொண்டு போகிறார்களா என கண்காணிக்க வேண்டும் என்ற தலைமை அலுவலக உத்தரவைக் கேட்டு தமிழகம் முழுவதுமுள்ள போலீஸ் அலர்ட்டாக இரவு பகலாக சுற்றி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இதனிடையே கடலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் இருந்த அதிகாரிகள் திடீரென பரபரப்பானார்கள்.

இது குறித்து விசாரித்த போது, ‘இரவு 10.30 மணியளவில் மாவட்ட நீதிமன்றம் கேட்டை உடைத்து உள்ளே ஒருவன் நுழைந்துவிட்டான்.

உடனே இரவு நேர ரோந்து அதிகாரி உதயகுமார் விரைந்து சென்று குற்றவாளியை பிடித்து விசாரித்து செல்போனை சோதனை செய்துவிட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்’ என்றார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

மாவட்ட நீதிமன்றம் கேட்டை உடைத்தவர் குறித்து விசாரித்த போது, ”அவர் பெயர் ராதாரமணன். மாவட்ட தலைமை கருவூலத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.

சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு கஞ்சா பழக்கம் ஏற்பட்டு, தான் என்ன தவறு செய்கிறோம் என்று அறியாமல் செய்து வருகிறார்” என்கிறார்கள் கருவூலம் ஊழியர்கள்.

சென்னை ராஜ்பவனில் கருக்கா வினோத் என்றால் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் ராதாரமணன் செயலால் மாநிலமே டென்ஷனானது.

-வணங்காமுடி

பெட்ரொல் குண்டு வீச்சு: ஆளுநரிடம் விளக்கம் அளித்த சென்னை கமிஷனர்!

திமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்த நடந்த சதி: அமைச்சர் ரகுபதி

+1
1
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *