திருச்சியில் ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து விசாரணை நடத்த மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சியில் இருந்து நேற்று (அக்டோபர் 11) ஷார்ஜாவிற்கு 141 பேருடன் இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் AXB 613-இல் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதை கண்டு நாங்கள் நிம்மதியடைந்தோம்.
அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் விமான குழுவினர் பின்பற்றி, அவசர காலத்தில் ஒவ்வொரு பயணிகளின் நலனையும் உறுதி செய்தனர்.
இரவு 8:15 மணிக்கு வெற்றிகரமாக விமானம் தரையிறங்கியது. ஹைட்ராலிக் பிரச்சனைக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விமானத்தை முழுமையாக ஆய்வு செய்யுமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு அவர்களின் பயணத்திற்கான மாற்று ஏற்பாடுகள் உட்பட தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பே எங்களின் முதன்மையான முன்னுரிமையாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘வேட்டையன்’ அலப்பறைகள்… அப்டேட் குமாரு
திருவள்ளூர் அருகே பயங்கர ரயில் விபத்து!