கார்த்திகை பெளர்ணமி: சதுரகிரி செல்ல நாளை முதல் அனுமதி!
சதுரகிரி கோயிலில் பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத பெளர்ணமி வழிபாட்டுக்காக நாளை (நவம்பர் 24) முதல் 28ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் சதுரகிரி கோயிலில் பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத பெளர்ணமி வழிபாட்டுக்காக 24ஆம் தேதி (நாளை) முதல் 28ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.
ஆனால், கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பக்தர்கள் இரவில் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மீண்டும் ரூ.10 லட்சம் அபராதம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!