பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் இன்று (மார்ச் 19) பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் போன்ற குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இதனடிப்படையில் பங்குனி மாத பிறப்பையொட்டி பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, தெலுங்கு வருடப்பிறப்பு ஆகிய நான்கு நாட்கள் தொடர்ந்து வருவதால்,
மார்ச் 19,20,21,22 ஆகிய நான்கு நாட்களும் பக்தர்கள் மலையேறி சுந்தர மகாலிங்க சாமியை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த நான்கு நாட்களும் மலையேறும் பக்தர்கள், 7 மணிக்கு மலை அடிவாரத்திற்கு வந்துவிட வேண்டும்.
மதியம் 12 மணி வரை மட்டுமே சாமி தரிசனம் செய்ய வேண்டும், பக்தர்கள் மலையேறும் போது அருகிலுள்ள நீரோடைகளுக்கு செல்ல கூடாது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் பிரதோஷம் என்பதால் பக்தர்கள் அதிகளவில் சுந்தர மகாலிங்க சாமியை தரிசிப்பதற்காக சதுரகிரி கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.
செல்வம்
ஈக்வாடரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 14 பேர் உயிரிழப்பு!
“பத்து தல” இசை வெளியீடு: சிம்பு சொன்ன பஞ்ச்!