devotees allowed in kanagasaba

சிதம்பரம் நடராஜர் கோவில்: கனகசபையில் பக்தர்களுக்கு அனுமதி!

தமிழகம்

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் ஏறி வழிபட பக்தர்களுக்கு அனுமதி மறுத்த நிலையில் இன்று (ஜூன் 28) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புகழ்பெற்ற ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தேரோட்டம் நடந்து முடிந்த நிலையில், ஜூன் 26 ஆனி திருமஞ்சன திருவிழா தரிசனம் நடைபெற்றது.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் திருத்தேர் விழாவையொட்டி, கனகசபையில் பொதுமக்கள் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் வழிபடத் தடை விதித்துள்ளதாகக் கோவில் தீட்சிதர்கள் கனகசபை வாயிலில் பதாகை வைத்தனர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னதாக தமிழ்நாடு அரசு கனகசபை மீது ஏறி வழிபட அனுமதி உண்டு என்று அரசாணை வெளியிட்ட நிலையில் அரசின் உத்தரவை மீறி தீட்சிதர்கள் பதாகை வைத்ததால் இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை அம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார், காவல்துறையினர் பதாகையை அகற்ற சென்றனர்.

அப்போது அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் தீட்சிதர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. சிறப்புப் பூஜைகள், பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதிக்க முடியாது என தீட்சிதர்கள் கூறியிருந்தனர்.

தீட்சிதர்களின் செயல்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பால் நிவேத்ய பூஜை முடிவு பெற்று தீட்சிதர்கள் அறிவித்தபடி கனகசபை மீது பக்தர்கள் ஏறி தரிசிக்க இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக தீட்சிதர்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சார் ஆட்சியர் உள்ளிட்டோர் நேற்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். அப்போது தீட்சிதர்கள் கூச்சலிட்டதால் கோவிலில் பரபரப்பான சூழல் நிலவியது.

மோனிஷா

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

தக்காளி திடீர் விலை உயர்வு: காரணம் இது தான்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *