தேவர் ஜெயந்தி விழா: போக்குவரத்து மாற்றம்!

Published On:

| By Jegadeesh

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அண்ணா சாலையில் நாளை (அக்டோபர் 30) போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நேற்று (அக்டோபர் 28 ) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் “தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் காலை 7 மணிக்கு அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றங்கள் தேவைக்கு ஏற்ப நடைமுறைபடுத்தப்பட உள்ளது.

அண்ணா சாலையில் சைதாப்பேட்டையிலிருந்து நந்தனம் மற்றும் சேமியர்ஸ் சாலை நோக்கி வரக்கூடிய வாகனங்கள் அண்ணா சாலை மற்றும் இணைப்புச் சாலை சந்திப்பில் இடது புறமாக திருப்பப்பட்டு இணைப்புச் சாலை – மாடல் அட்மேன்ட் சாலை – வி.என்.சாலை – தெற்கு போக் சாலை – வடக்கு போக் சாலை – தியாகராய சாலை – எல்டாம்ஸ் சாலை – எஸ்ஜஇடி – கே.பி.தாசன் சாலை – வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

Devar Jayanti Festival Traffic Change

அண்ணாசாலை தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் – அண்ணா சாலை மற்றும் செனடாப் சாலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டு ஜி.கே.மூப்பனார் மேம்பாலம் வழியாக கோட்டூர்புரம் பாலம் – காந்தி மண்டபம் சாலை – சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை – வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

ஜி.கே.மூப்பனார் மேம்பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு அண்ணா சாலை மற்றும் செனடாப் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் கோட்டூர்புரம் நோக்கி அனுமதிக்கப்படும்.

கோட்டூர்புரத்திலிருந்து அண்ணா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. சேமியர்ஸ் சாலையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் டர்ன் புல்ஸ் சந்திப்பிலிருந்து செனடாப் சாலை சந்திப்பு – ஜி.கே.மூப்பனார் மேம்பாலம் – காந்தி மண்டபம் சாலை – சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை – வழியாக செல்ல திருப்பிவிடப்படும்.

Devar Jayanti Festival Traffic Change

அண்ணா மேம்பாலத்திற்கு சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அவ்வாகனங்கள் கத்தீட்ரல் சாலை ஆர்.கே சாலை வழியாக சாந்தோம் சென்று இலக்கினை அடையலாம்.

போக்குவரத்து அதிகம் இருக்கும் பட்சத்தில் தேவை ஏற்பட்டால், அண்ணா சாலையில் கிண்டியிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் சின்னமலை சந்திப்பிலிருந்து நந்தனம் நோக்கி அனுமதிக்கப்படாமல் தாலுக்கா ஆபிஸ் சாலை – சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை – காந்திமண்டபம் சாலை – கோட்டூர்புரம் சாலை வழியாக தங்கள் இலக்கை சென்று அடைய திருப்பிவிடப்படும்.

அண்ணா சாலையிலிருந்து நந்தனம் நோக்கி வரக்கூடிய வானங்கள் சிஐடி நகர் 1 வது மெயின் ரோடு மற்றும் அண்ணா சாலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டு சி.ஐ.டி. நகர் 1வது மெயின் ரோடு – தெற்கு உஸ்மான் சாலை – மேட்லி சந்திப்பு – பர்கிட் ரோடு – தணிகாச்சலம் ரோடு – மெலனி ரோடு – தெற்கு போக் சாலை – வடக்கு போக் சாலை வழியாக அண்ணா சாலை சென்றடையலாம்.

கத்திப்பாரா மேம்பாலத்தில் வரும் வாகனங்கள் சிப்பட் – அம்பாள் நகர் – காசி மேம்பாலம் – வடபழனி – ஆற்காடு ரோடு வழியாக அண்ணா சாலை நோக்கி செல்ல திருப்பிவிடப்படும்.

தாம்பரத்திலிருந்து கத்திப்பாரா நோக்கி வரக்கூடிய சரக்கு வாகனங்கள் கத்திப்பாரா சந்திப்பில் சிப்பெட் நோக்கி திருப்பிவிடப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

இதுவும் கடந்து போகும் : சமந்தா நெகிழ்ச்சி பதிவு!

தாலி கட்டியவுடன் மணமகன் செய்த செயல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel