பொங்கல் திருநாளை கொண்டாட தமிழ்நாடு அரசின் சிறப்பு பேருந்துகள் மூலம் இதுவரை 6.4 லட்சம் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும்.
அதன்படி இந்தாண்டு ஒரு வாரத்திற்கும் மேலாக பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது.
அவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கடந்த மூன்று நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது.
அதன்படி நேற்று (ஜனவரி 12) தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,858 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதில் 2,17,250 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
கடந்த 11ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் மூலம் 2,17,250 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களிலும் ஒட்டுமொத்தமாக 11,463 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், அதன்மூலம் 6,40,465 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
பலரும் சொந்த ஊருக்கு சென்றுள்ளதால், வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையன்று, சென்னை மாநகரின் பல சாலைகளும் வெறிச்சோடியே காணப்படுகிறது. மேலும் பல முக்கிய இடங்களில் எப்போதும் காணப்படும் போக்குவரத்து நெருக்கடியும் வெகுவாக குறைந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முதல்வருக்கு ஆணவமா? : ஆளுநருக்கு தக் ரிப்ளை கொடுத்த துரைமுருகன்
48வது சென்னை புத்தகத் திருவிழா நிறைவு : புதிய உச்சம் தொட்ட விற்பனை!
டாப் 10 நியூஸ் : பிரதமர் மோடி திறக்கும் சுரங்கப்பாதை முதல் மகா கும்பமேளா வரை!