கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இடத்தினை அழகர்கோவில் துணை ஆணையர் தலைமையிலான குழுவினர் இன்று (ஏப்ரல் 14) ஆய்வு செய்தனர்.
மதுரையில் சித்திரைத் திருவிழா எப்ரல் 22 முதல் மே 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது, மீனாட்சியம்மன் கோவிலில் 12 நாட்களும், கள்ளழகர் கோவிலில் 10 நாட்களும் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது.
சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு மே 5 ஆம் தேதி காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் நடைபெறுகிறது.
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இடத்தினை அழகர்கோவில் துணை ஆணையர் ராமசாமி ஆய்வு செய்தார். துணை ஆணையருடன் ஆய்வுக் குழுவினரும் ஆய்வில் ஈடுபட்டனர்.
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இடத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பு வேலிகள், பந்தல், மலர் அலங்காரம், மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் தண்ணீர் பீச்சுதல் நடைபெறும் இராமராயர் மண்டபத்திலும் ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
சித்திரைத் திருவிழாவிற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் மாநகராட்சி செய்ய வேண்டிய பணிகள் குறித்து நேற்று (ஏப்ரல் 13) ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் அழகர்கோவில் நிர்வாகம் சார்பில் இன்று ஆய்வு செய்யப்பட்டது.
இராமலிங்கம்
பாஜக பகை அல்ல: ‘A படம்’ விழாவில் திருமாவளவன்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!