பள்ளி பதிவேடுகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் கையெழுத்தையும் , இனிஷியல் எனப்படும் பெயரின் முன் எழுத்தையும் தமிழில் போடுமாறு பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து , பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இனி பெயர் எழுதினால் இனிஷியலை கட்டாயம் தமிழில் தான் எழுத வேண்டும்.
பள்ளிக்கு மாணவர்கள் அளிக்கும் விண்ணப்பம், வருகைப் பதிவேடு பள்ளி, கல்லூரி முடித்து பெறுகின்ற சான்றிதழ் வரையில் அனைத்திலும் இனிஷியல் மற்றும் கையெழுத்து தமிழில் தான் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், முதற்கட்டமாக பள்ளி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பராமரிக்கப்படும் மாணவர்களின் 30 பதிவேடுகளில்
மாணவர்கள், பெற்றோர்கள் பாதுகாவலர் பெயர்கள் தமிழில் பதிவேற்றம் செய்யும் போது அதனை தமிழ் முன்னெழுத்துடனேயே பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வீட்டுப்பாடம் : பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு!