சென்னை தலைமை செயலகத்தில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் காய்ச்சல், சளி போன்ற நோய்களால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, தென்காசி, கோவை, கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா நோய்கள் அதிகரித்து வருகின்றன. சென்னை மதுரவாயலில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு 4 வயது சிறுவன் ரக்ஷன் செப்டம்பர் 9-ஆம் தேதி உயிரிழந்தார்.
சுகாதார பணிகளை மேற்கொள்ளாததால் சிறுவன் ரக்சன் உயிரிழந்ததாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். தமிழ்நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு பணியை சிறப்பாக செய்து இறப்பு இல்லாத நிலையை ஏற்படுத்தும் வகையில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கால்நடைத்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சுகாதாரப்பணிகளை மேற்கொள்வது, அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் கடுமையான நடவடிக்ககளை எடுக்க எச்சரிக்கை விடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
செல்வம்
விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்!
ED ரெய்டா?: துரைமுருகன் சொன்ன பதில்!