தமிழ்நாட்டிற்கு காவிரியில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட நீரின் அளவை திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் இன்று (அக்டோபர் 11) நடைபெற்றது.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மற்றும் பாசன வசதி பெறும் மாவட்டங்களான அரியலூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த இந்த கடையடைப்பு போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.
மேலும், காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் அனைத்து கட்சியினரும், விவசாய சங்கத்தினரும் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை வினாடிக்கு 3000 கன அடி நீர் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு இன்று உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
மேலும் நேற்று மாலை ஒகேனக்கல் வனப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடியில் இருந்து 9 ஆயிரத்து 500 கன அடியாக உயர்ந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
INDvsAFG: ஒரே போட்டியில் பல உலக சாதனைகளை முறியடித்த ரோகித் சர்மா… இந்தியா அபார வெற்றி!
டிஜிட்டல் திண்ணை: துரைமுருகன் – எடப்பாடி நெருக்கம்… ஸ்டாலின் கோபம்!