டெல்டா மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் எச்சரிக்கை!

Published On:

| By Minnambalam Login1

delta districts rains

டெல்டா மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 10) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 2 செ.மீ மழையும், விருதுநகர் காரியாப்பட்டியில் 1 செ.மீ மழையும் நேற்று பதிவானது.

இந்தச் சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 9) வெளியிட்டுள்ள அறிக்கையில் “கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவுகிற காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, சற்று வலுவடையக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

09-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

10-12-2024: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ஆதவ் நீக்கம்… யார் கொடுத்த அழுத்தம்? – ஸ்டாலினை சந்தித்த பின் திருமா பேட்டி!

சார்… சார்… அநியாயமா இருக்கு : சட்டப்பேரவையில் துரைமுருகன் – எடப்பாடி இடையே காரசார விவாதம்!

10 நாளில் சிரியாவை சோலி முடித்த தளபதி… யார் இந்த அபு முகமது அல் – ஜோலானி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share