delta districts agricultural damage

டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு ஆய்வு!

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை ஆய்வு செய்வதற்கு நாளை (பிப்ரவரி 8) மத்திய அரசின் ஆய்வு குழு தமிழகம் வருகிறது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றதால் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால், டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் நீர்ல் மூழ்கிச் சேதமடைந்தன.

இந்த இழப்பை ஈடுகட்டுவதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் கோரிக்கைகளை வைத்து வந்தனர். தொடர்ந்து, வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும் முதலமைச்சரின் உத்தரவின் படி, 2 அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக் குழு அமைத்துச் சேதமடைந்த பயிர்கள் ஆய்வு செய்யப்பட்டு புள்ளிவிவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாகத் ”கனமழையால்‌ பாதிக்கப்பட்ட அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை நேரடிக்‌ கொள்முதல்‌ நிலையம்‌ மூலம்‌ கொள்முதல்‌ செய்திடும்போது, விவசாயிகளின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு,

22 சதவிகிதம்‌ வரை ஈரப்பதம்‌ உள்ள நெல்லை கொள்முதல்‌ செய்திட உரிய தளர்வுகளை வழங்கிடுமாறு” தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இந்தியப்‌ பிரதமருக்கு கடிதம்‌ எழுதியிருந்தார்.

மாநில அரசு சார்பாகவும் நிவாரணம் வழங்குவது குறித்து நேற்று (பிப்ரவரி 6) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஒரு ஹெக்டருக்கு 20,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கனமழையின் போது சேதமடைந்த பயிர்களையும், பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக சேதமடைந்த பயிர்களையும், நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் குழு நாளை தமிழகம் வரவுள்ளது.

மத்திய அரசின் ஆய்விற்கு பிறகு சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மோனிஷா

ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு!

இறுதியாக மேளதாளத்துடன் களத்தில் இறங்கிய அதிமுக வேட்பாளர்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts