புயல் உருவாவதில் தாமதம் – ரெட் அலர்ட் வாபஸ்!

Published On:

| By Kavi

புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (நவம்பர் 27) மாலை 5.30 மணிக்கு புயல் உருவாகும் என்று  கூறப்பட்டிருந்த  நிலையில் அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு விடப்பட்டிருந்த ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டுள்ளது.

தற்போது நாகையில் இருந்து 320கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து 500கிமீ தொலைவிலும் புயல் சின்னம் உள்ளதாகவும்,

13 கிமீ வேகத்தில் தகர்ந்து வந்த புயல் சின்னம் தற்போது 3 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதால், அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30-ம் தேதி காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை அடையும் என்றும் தெரிவித்துள்ளது.

எங்கெங்கு மழை

28-11-2024: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

29-11-2024: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30-11-2024: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

”வெறும் 10 நிமிடம் தான்” : காளியம்மாள் பேச்சுக்கு சீமான் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share