தீபாவளி பண்டிகை: புதிய உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை!

தமிழகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.467 கோடி மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் பண்டிகை என்றாலே மதுபான விற்பனை பல கோடிகளை எட்டி விடுகிறது.

இந்த நிலையில் நேற்று (நவம்பர் 12) மாநிலம் முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையும் படு ஜோராக நடைபெற்றுள்ளது.

அதன்படி கடந்த 2 நாட்களில் மாநிலம் முழுவதும் ரூ.ரூ.467 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி விடுமுறையில் ரூ.464 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

கடந்த 11ஆம் தேதி ரூ.220 கோடிக்கும், நேற்று ரூ.247 கோடிக்கும் மதுபானம் விற்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஒருநாளைக்கு ரூ.150 கோடி அளவில் தான் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையாகும் என்ற நிலையில்,  தீபாவளியை முன்னிட்டு சுமார் 50 சதவீதத்திற்கும் மேலாக விற்பனை அதிகரித்துள்ளது.

தீபாவளியான நேற்று சென்னையில் ரூ.52.98 கோடி, மதுரையில் ரூ.51.97 கோடி, திருச்சியில் ரூ.55 கோடி என்ற அளவில் மது விற்பனையாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சென்னையில் அதிக காற்று மாசுபாடு… நாளை விடுமுறையா?

சிங்கப்பூரிலும் பெரியார்! ஸ்ரீரங்கத்திலும் பெரியார்! அரை நூற்றாண்டு கடந்தும் முளைக்கும் விதைகள்!

 

+1
1
+1
3
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *