வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (டிசம்பர் 7) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிதாக உருவாகக்கூடிய புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியிருக்கக்கூடிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் டிசம்பர் 8-ஆம் தேதி இரவு அல்லது 9-ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாண்டஸ் புயல் காரணமாக இன்று முதல் டிசம்பர் 10-ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 9-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செல்வம்
சிம்புவுக்கு விரைவில் திருமணம்: டி. ஆர் கொடுத்த அப்டேட்!
கிச்சன் கீர்த்தனா: மஷ்ரூம் சுக்கா