கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை என்ற இடத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு குடோனில் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த குடோனில் இன்று (ஜூலை 29) காலை 10 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் பட்டாசு குடோனும், வெடி விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த 3 வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின.
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியிலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து ஏற்பட்ட உடனே சம்பவ இடத்தில் 4 பேர் பலியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு, காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு, மீட்பு பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த பட்டாசு குடோன் உரிமம் பெற்று இயங்கி வந்துள்ளது.
இதனால் மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் பட்டாசு குடோன் வைக்க அனுமதி அளித்தது எப்படி என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுடன் நிற்கிறோம்: கனிமொழி எம்.பி