மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இன்று (மே 16) உயிரிழந்த நிலையில் விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்திய 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் தற்போது வரை 12 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜவேல்(38) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இதனால் தற்போது கள்ளச்சாராயம் அருந்தி பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
சேலம் ஏற்காட்டில் 21ஆம் தேதி முதல் கோடை விழா!