தூர்தர்ஷன் டிடி பொதிகை வரும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் டிடி தமிழ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (நவம்பர் 10) தெரிவித்தார். dd podhigai name changed dd Tamil
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், மண்டல மக்கள் தொடர்பகம், பத்திரிகை பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களை ஒருங்கிணைத்து சென்னை சேப்பாக்கத்தில் கட்டப்பட்ட தகவல் மாளிகை அலுவலகத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,
“நவம்பர் 15-ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிர்சா முண்டா பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்லும் யாத்திரை துவங்க உள்ளது.
இந்தியா முழுவதும் 2.5 லட்சம் கிராமப்பகுதிகளிலும், 18 ஆயிரம் நகர்ப்பகுதிகளில் இந்த யாத்திரை நடைபெறுகிறது. தமிழகத்தில் 12,525 கிராமப்பகுதிகளிலும் 1,455 நகர்ப்பகுதிகளிலும் நடைபெறுகிறது.
2047-ஆம் ஆண்டு 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்பதற்கான யாத்திரையாக உள்ளது.
தூர்தர்ஷன் டிடி பொதிகை ஜனவரி 14 முதல் டிடி தமிழ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ரீ லாஞ்ச் செய்யப்பட உள்ளது.
பல்வேறு புதிய நிகழ்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
நடுநிலையோடு அரசியல் விவாத நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகள், களத்திற்கு சென்று நிருபர்கள் செய்தி சேகரிக்க உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினிடம் நீட் தேர்வினால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று டிடி நிருபர்கள் கேள்வி கேட்க தயாராக உள்ளனர்.
முத்ரா திட்டத்தில் தமிழகத்தில் தான் அதிகளவில் பயனடைந்துள்ளனர். உஜ்வாலா, ஜல்ஜீவன் மிஷன் திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு சென்று சேர்கிறது.
ஊழலுக்கு பெயர் போன அரசாங்கமாக தமிழக அரசு உள்ளது. ஒரு அமைச்சர் ஜெயிலில் உள்ளார். மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார். dd podhigai name changed dd Tamil
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2024-ல் எத்தனை நாட்கள் பொது விடுமுறை!
சென்னை வீரபத்ர கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு!
Is there still a TV Channel like that & if so, who is watching it ?
நல்ல தமிழ்க் பெயரை ஏன் மாற்றனும்?