விநாயகருக்குப் படைக்கும் இனிப்பு சுவையாக இருப்பதுடன், சத்தாகவும் இருந்தால் இந்த நாளை கூடுதல் மகிழ்ச்சியாக்கும்தானே… அதற்கு இந்த டேட்ஸ் பர்ஃபி உதவும். இந்த பர்ஃபியில் உள்ள புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து எலும்புகளை வலுப்படுத்தும், முகப்பொலிவு மற்றும் சருமப் பொலிவுக்கு உதவும். மலச்சிக்கல் தீரும்.
என்ன தேவை?
பேரீச்சம்பழம் – 100 கிராம்
தேங்காயில் எடுக்கப்பட்ட சர்க்கரை (Coconut Sugar) – 100 கிராம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்)
பால் – 50 மில்லி
நெய் – 50 கிராம்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
பாதாம் பருப்பு – 5
எப்படிச் செய்வது?
பாதாம்பருப்பைத் துருவிக் கொள்ளவும். பாலை இளஞ்சூடாகக் காய்ச்சிக்கொள்ளவும். பேரீச்சம்பழத்தைக் கொட்டை நீக்கி, அரை மணி நேரம் பாலில் ஊற வைக்கவும். ஊறவைத்த பேரீச்சம்பழம், தேங்காய் சர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடாக்கி, அரைத்த பேரீச்சை விழுதைச் சேர்த்து கொஞ்சம், கொஞ்சமாக நெய் சேர்த்து நன்றாகக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வந்ததும், ஏலக்காய்த்தூள், பாதாம் துருவல் சேர்த்து, நெய் தடவிய தட்டில் போட்டு சமப்படுத்தவும். ஆறியவுடன் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.
புஷ்பா 2 சாதனையை முறியடித்த லியோ
Mr. அண்ணாமலை 6 மணிக்கு மேல் சி.வி.சண்முகம் பேசுவார்: அப்டேட் குமாரு