ஆடல்-பாடல் நிகழ்ச்சி : காவல்துறைக்கு புதிய உத்தரவு!

Published On:

| By Jegadeesh

ஆடல் – பாடல் நிகழ்ச்களுக்கு அனுமதி கோரினால் 7 நாட்களில் காவல்துறை முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று(மே24)உத்தரவு.

உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு உட்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிவகங்கை, திருச்சி , புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு ஆடல் பாடல், கரகாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகள் நடத்த அனுமதி கோரி தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர் .

இந்த மனுக்கள் நீதிபதிகள் M.S. ரமேஷ் மற்றும் ஆஷா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது மனுதாரர் தரப்பில், கலைநிகழ்ச்சிகள் நடத்த காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தும் உரிய பதில் இல்லாததால் , அனுமதி வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது .

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், மனுக்கள் மீது பதிலே கூறாமல் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே ஆடல்-பாடல், கரகாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளித்தால், ஏழு நாட்களுக்குள் காவல் துறை அதிகாரி பரிசீலனை செய்து அனுமதி வழங்க வேண்டும்.

அல்லது , அனுமதி இல்லை என தெரிவிக்க வேண்டும். 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்க வில்லை என்றால் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும் என உத்தரவிட்டடனர். இது குறித்து காவல்துறை தலைவர் அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் புதிதாக ஒரு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என பரிந்துரைத்தனர்.

மேலும், உயர் நீதிமன்றம் கிளையில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட மனுக்கள் அனைத்திற்கும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

குமரியில் ஏசி படகு: கட்டணம் எவ்வளவு?

எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை மையம் தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share