அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை 53 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. தற்போதைய அடிப்படைச் சம்பளம் / ஒய்வூதியத்தின் 50-ஐ விட மூன்று சதவீதம் (3%) உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கும் அக விலைப்படியை உயர்த்தி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
3 சதவிகிதம் உயர்த்தி 01.07.2024 முதல் 53 சதவீதமாக வழங்கப்படும். இதன்மூலம் அரசுக்கு ரூ.1,931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தங்க கம்மலுக்காக பெண்ணின் காதை அறுத்த கும்பல்… துடித்து போன கணவர்!
தேர்தல் பத்திரம் முதல் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் வழக்கு வரை : யார் இந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா?
என்கவுண்ட்டர் விவகாரம்… கமிஷனர் அருண் விளக்கம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு!