Gas Cylinders Price : சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று (ஜூலை 1) குறைக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையானது, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று ஜூலை 1ஆம் தேதியன்று சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் அதன் விலை ரூ.1,840.50 ஆக இருந்த நிலையில், இம்மாதம் ரூ1,809.50-க்கு விற்பனையாகிறது.
தொடர்ந்து 4வது மாதமாக வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது வணிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், கடந்த மாதம் போலவே இந்த மாதமும் ரூ.818.50 என்ற அளவிலேயே விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பியூட்டி டிப்ஸ்: மீண்டும் மீண்டும் பொடுகுத்தொல்லை… மீள்வது எப்படி?