மிக்ஜாம் புயல் : தனியார் நிறுவனங்களுக்கு அறிவுரை!

தமிழகம்

தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்துமாறு தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

மிக்ஜாம் புயல் இன்று (டிசம்பர் 3) மாலை 5.30 மணி நிலவரப்படி, தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு தென்கிழக்கிலும்,  சென்னையில் இருந்து 210 கிமீ தென் கிழக்கிலும், நெல்லூரில் இருந்து 330 கிமீ தெற்கு – தென் கிழக்கிலும்  நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேலும் வலுவடைந்து டிசம்பர் 4ஆம் தேதி முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கன மழையுடன் புயல் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு, அத்தியாவசியப் பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இம்மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை ஒரு நாள் பொது விடுமுறை என அறிவித்துள்ளது.

அதுபோன்று, “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படலாம்” என்று தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

பிரியா

மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் : முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

தெலங்கானா டிஜிபி சஸ்பெண்ட்: காரணம் இதுதான்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *