வங்கக்கடலில் உருவாகும் புயல் ஆந்திரா அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 1) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தொடர்ந்து மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 3-ஆம் தேதி சென்னைக்கு மிக அருகில் புயலாக வலுப்பெறும்.
இந்த புயலானது தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து சென்னை – மசூலிப்பட்டிணம் இடையே டிசம்பர் 4-ஆம் தேதி மாலை கரையை கடக்கும். இந்த புயலுக்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் போது சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் காற்றின் வேகத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
இதனால் டிசம்பர் 2,3,4 ஆகிய நாட்களில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பரந்தூர் விமான நிலையம்: குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் போராட்டம்!
வணிக சிலிண்டர் விலை உயர்ந்தது!
சென்னை போலீசில் அதிரடி மாற்றம்: அமைச்சர் சேகர்பாபுவுக்கு செக்?