24 மணி நேரத்தில் புயல் வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம்!
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (டிசம்பர் 2) வலுப்பெற்றுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக, கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தின் அநேக இடங்களிலும் கன மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையிலிருந்து 510 கி.மீ தொலைவில் கிழக்கு – தென் கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
18 கி.மீ வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து நெல்லூரிலிருந்து 630 கி.மீ தென் கிழக்கு திசையிலும், மசூலிப்பட்டிணத்திலிருந்து 710 கி.மீ தெற்கு தென் கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயலாக வலுப்பெறும். இதன்காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். மீனவர்கள் டிசம்பர் 2,3,4 ஆகிய நாட்களில் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆசிரியர் கி.வீரமணி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் – புரூக்கோலி சூப்