வங்கக்கடலில் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயல் உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 29) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணியளவில் நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு திசையில் 360 கி.மீ தூரத்திலும், சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 400 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டது.
இது அடுத்த மூன்று மணி நேரத்தில் (அதாவது இன்று மதியம் 1 மணி அளவில்) புயலாக வலுப்பெறக்கூடும். மேலும், வடமேற்கு திசையில் நகரந்து காரைக்கால் – மகாபலிபுரம் இடையே, நாளை (நவம்பர் 30) புயலாக கரையைக்கடக்கும். அப்போது அதன் வேகம் மணிக்கு 70-80 கி.மீ இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் உருவானால், அதற்கு ‘ஃபெங்கல்’ என்று பெயரிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
இதை எதிர்பார்க்கவே இல்லையே… விர்ரென ஏறிய தங்கம் விலை!
கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு கிராக்கி: விவசாயிகள் மகிழ்ச்சி!
புதுக்கோட்டை: பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!