கிச்சன் கீர்த்தனா: கறிவேப்பிலைத்தட்டை

இப்போது உள்ள சூழலில் சாட் மற்றும் பேக்கரி வகைகள் தவிர்க்க முடியாதவையாகி விட்டன. எனவே, வாரத்துக்கு  இரண்டு நாட்கள் பப்ஸ், கேக் போன்ற சாட் ஐட்டங்களை எடுத்தால், ஒரு நாள் அவித்த பயறுகள், ஒரு நாள் பழங்கள், சாலடுகள், ஒரு நாள் வேர்க்கடலை, கிழங்கு வகைகள், மற்றொரு நாள் பாதாம், முந்திரி, உலர் திராட்சை மற்றும் பேரீச்சம்பழம் என எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் இந்த கறிவேப்பிலைத் தட்டையையும் அவ்வப்போது செய்து ருசிக்கலாம்.

என்ன தேவை?
பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு – ஒரு கப்  

எள், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, மிளகாய்த்தூள் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை – கால் கப்  

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு 

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?
பொட்டுக்கடலை, வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு, எள், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசறவும். பிறகு தண்ணீர்விட்டு மாவைக் கெட்டியாகப் பிசையவும். மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டின் மீது மாவைத் தட்டைகளாகத் தட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுத் தட்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு தயாரிக்க: 

பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்தவும். வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பைப் பொன்னிறமாக வறுக்கவும். அரிசியுடன் உளுத்தம்பருப்பு சேர்த்து மெஷினில் மாவாக அரைத்து வரவும்.  இதுவே பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு. ஊறவைத்த கடலைப்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்தும் செய்யலாம். சப்பாத்தி மேக்கரில் வைத்து அழுத்தியும் தட்டையைத் தட்டலாம்.

பாம்பே லக்டி

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts