கிச்சன் கீர்த்தனா: கறிவேப்பிலை மீன்
பிரதான உணவுக்கு முன் வழங்கப்படும் சிறு உணவு கலாச்சாரம் இப்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த கறிவேப்பிலை மீன் புதுவிதமாக ஸ்டார்டர் உணவாக இருக்கும். இதை வீட்டிலேயே செய்ய இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
இஞ்சி – 1
பூண்டு – 2
சிவப்பு மிளகாய் – 5
கறிவேப்பில்லை – 250 கிராம்
வெங்காயம் – 50 கிராம்
தேங்காய் எண்ணெய் – 50 மில்லி
மீன் – 150 கிராம்
(எந்த வகை மீனையும் பயன்படுத்தலாம்)
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை- 1
எப்படிச் செய்வது?
மீனை முதல் நாள் இரவே உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து ஊற வைத்துவிடவும். தேங்காய் எண்ணெயில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலையைச் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளவும். இதை அரைத்து எடுத்து, மீனுடன் சேர்த்துக் கிளறி 10 முதல் 15 நிமிடம் வேகவைத்து எடுத்து சாப்பிடலாம். இது ஸ்டாட்டருக்கு நன்றாக இருக்கும்.