கிச்சன் கீர்த்தனா : கொத்துக்கறி பச்சைப் பட்டாணி பிரியாணி!

தமிழகம்

அந்தக் கடை, இந்தக் கடை, எந்தக் கடை பிரியாணி சூப்பராக இருக்கும் என்று ஆராய்ந்துகொண்டிருப்பதற்கு பதில், நீங்களே உங்கள் வீட்டில் வித்தியாசமான, சுவையான வெரைட்டியான பிரியாணி தயாரித்து வீக் எண்டை கொண்டாட இந்த  கொத்துக்கறி பச்சைப் பட்டாணி பிரியாணி உதவும்.

என்ன தேவை?
கொத்துக்கறி – அரை கிலோ
சீரக சம்பா அரிசி – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய் – 2
இஞ்சி-பூண்டு – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் – 5
கிராம்பு – 5
பட்டை – 2
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
புதினா – சிறிதளவு
பச்சைப் பட்டாணி – 50 கிராம்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் – அரை பழம்
உப்பு – தேவையான அளவு
நெய் + எண்ணெய் – தலா 100 மில்லி

எப்படிச் செய்வது?
குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி நன்கு சூடேறியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துப் பொரிந்ததும் வெங்காயம், கீறிய பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இதனுடன் நன்கு சுத்தம் செய்த கொத்துக்கறியையும், பட்டாணியையும் போட்டு நன்கு வதக்கி இத்துடன் தயிர் சேர்த்து நன்கு கிளறி கழுவி வைத்துள்ள அரிசியையும் சேர்த்து அரிசி: தண்ணீர், 1:1.5 (ஒன்றுக்கு ஒன்றரை பங்கு விகிதம்)என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி, எலுமிச்சைச்சாறு பிழிந்து ஒரு விசில் விட்டு ஐந்து நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து இறக்கி பிறகு பரிமாறவும்.

நேரத்தை நிர்வகிப்பது எப்படி?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *