கிச்சன் கீர்த்தனா : தயிர் – வெஜிடபிள் உப்புமா!

தமிழகம்

நிறம், வடிவம் போன்றவை குழந்தைகளை ஈர்க்கும் நிலையில் உணவை, மிகவும் வித்தியாசமாகப் பற்பல வண்ணங்களில் வடிவங்களில் செய்து கொடுக்கும்போது ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள். அதற்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த தயிர் – வெஜிடபிள் உப்புமா. வெஜிடபிள், தயிர், பட்டாணி என எல்லாம் கலந்த மிக்ஸ்டு உப்புமாவாக இது இருப்பதால் ஊட்டச்சத்துக்கள் அதிகம். அனைவருமே சாப்பிட ஏற்ற உணவு இது. காலையில் உப்புமா சாப்பிட்டால், மதியம் வரை பசிக்காது.

என்ன தேவை?

குதிரைவாலி அரிசி, புளித்த தயிர் – தலா ஒரு கப் 

தேங்காய்த் துருவல் – அரை கப்

குடமிளகாய், கேரட் – பொடியாக நறுக்கியது தலா ஒன்று 

பச்சைப்பட்டாணி, பொடியாக நறுக்கிய வெங்காயம் – தலா 2 டேபிள்ஸ்பூன் 

காய்ந்த மிளகாய் – 3

கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
தாளிக்க… 

கடுகு – அரை டீஸ்பூன் 

கடலைப் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் 

உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், சிறிது உப்பு சேர்த்துக் கரகரப்பாக அரைக்க வேண்டும். தயிரில் சிறிது உப்பு சேர்த்து, நீர்விட்டு தோசை மாவு போல் கரைக்க வேண்டும்.

வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு, சூடானதும் தாளிக்கும் பொருட்கள் போட்டுத் தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம் வதக்கி, காய்கறி, பட்டாணி போட்டு, அரைத்த மாவு, மசாலா சேர்த்து, மிதமான அனலில் கைவிடாமல் கிளறவும். வெந்ததும் இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

தக்காளி இடியாப்பம்!

எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடம்பு ஏறவில்லையே என்று ஏங்குபவரா நீங்கள்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *