சுனாமி பேரழிவின் 19-ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (டிசம்பர் 26) கடலூர் மாவட்ட மீனவ கிராம மக்கள் பேரணியாக சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004-ஆம் ஆண்டு சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் சுனாமி பேரலையில் சிக்கியது.
இதில் கடற்கரை கிராமங்களில் வசித்த மக்கள் பலரும் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தனர். ஆண்டுகள் 19 கடந்தும் சுனாமி பேரலை ஏற்படுத்திய தாக்கம் மக்கள் மனதில் இன்னும் ஆறாத வடுவாகவே உள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் சுனாமி பேரலையால் 1,017 பேரும், நாகையில் 6,065 பேரும் உயிரிழந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் சுனாமி நினைவு நாளான்று கடற்கரை கிராம மக்கள் உயிரிழந்தவர்களுக்கு கடற்கரையில் அஞ்சலி செலுத்துவார்கள்.
அந்தவகையில், கடலூர் மாவட்ட மீனவ கிராம மக்கள் பேரணியாக சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர். அப்போது தங்கள் உறவினர்களை நினைத்து அவர்கள் அழுதனர். கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவு தினத்தையொட்டி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது!
திருப்பதி: ஜனவரி 1 வரை டோக்கன் இல்லாமல் தரிசனம் செய்ய முடியாது!
இந்த 2 பேர் ஏன்? RCB-யின் தந்திரம் இதுதான்! ‘பிளேயிங் 11’ என்ன?
வேலைவாய்ப்பு: ICMAI- யில் பணி!