கடலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ் திலகராஜ் ஆசிட் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்தவர் திலகராஜ். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் 2017-ஆம் ஆண்டு ஆயுதப்படை பேட்ச்சை சேர்ந்தவர்.
இன்று (அக்டோபர் 16) மாலை 6.30 மணியளவில் திலகராஜ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாட்டிலில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆசிட் குடித்ததால், திலகராஜின் உதடு பகுதி, குடல் பகுதி, மூச்சு குழாய் பகுதியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்கு திலகராஜ் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திலகராஜின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எஸ்.பி.ராஜாராம் உள்ளிட்ட போலீசார் மருத்துவமனைக்கு சென்று திலகராஜ் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளனர்.
திலகராஜ் போலீசிடம் கொடுத்த வாக்குமூலத்தில், “பாத்ரூம் யூசேஜுக்காக ஆசிட் பாட்டில் வாங்கி வச்சிருந்தேன். அதை தண்ணி பாட்டில்னு தெரியாம எடுத்து குடிச்சிட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
திலகராஜ் ஆசிட் எங்கு வாங்கினார்? தண்ணீர் என்று தெரியாமல் தான் குடித்தாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்ற கோணத்தில் கடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: கூட்டணி டென்ஷனை குறைக்க திமுகவின் ’மாநாடு’ மாஸ்டர் பிளான்!
ராபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!