ஜெயிலர் குடும்பத்தினரை தீ வைத்து எரிக்க முயற்சி: 3 பேர் சரண்!

தமிழகம்

கடலூரில் உதவி ஜெயிலர் குடும்பத்தினரை தீ வைத்து எரிக்க முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் இன்று (செப்டம்பர் 6) பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கடலூர் மாவட்டம், சிறைத்துறை அதிகாரிகளின் குடியிருப்புகளில் உள்ள சிறை அலுவலர் மணிகண்டன் வீட்டில் கடந்த 28ஆம் தேதி நள்ளிரவு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனசேகரன் சிறையிலிருந்த படியே ஸ்கெட்ச் போட்டு மணிகண்டன் வீட்டில் கூலிப்படை மூலம் தீ வைத்தது தெரியவந்தது.

குறிப்பாக மணிகண்டன் வீட்டில் தீ வைக்கக் கைதி தனசேகரனுக்கு உதவியாகச் சிறைச்சாலையில் பணிபுரியும் சிறைக் காவலர் செந்தில் குமாரும் உதவியது போலீஸ் வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தனசேகரன் ஆட்களான,

மனோ என்கிற மணவாளன், கார்த்தி மற்றும் இளந்தமிழன் ஆகியோர் இன்று (செப்டம்பர் 6) பிற்பகல் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

செல்போன் பறிமுதல் – ஜெயிலர் குடும்பத்தை தீ வைத்து எரிக்க முயற்சி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *