கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
கார் ஆவட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு பேருந்து கார் மீது மோதி 100 மீட்டர் தொலைவிற்கு இழுத்து சென்றது. அப்போது சாலை ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணித்த 5 பேர் சிக்கி கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் வேப்பூர் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் ஒரு மணி நேரமாக போராடி மீட்டனர்.
இதில் கார் ஓட்டுநர், இரண்டு பெண்கள், இரண்டு வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதியவர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு பெரம்பலூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
விருத்தாசலம் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்வம்
கருத்தரங்கில் புகுந்து காவிகள் தாக்குதல்: ஷாக் வீடியோ!
மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு பலத்த அடி..இந்திய அணி அபார வெற்றி!