crop insurance extend

பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகம்

பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (நவம்பர் 15) நிறைவடைய இருந்த நிலையில், நவம்பர் 22-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சம்பா, தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைய இருந்தது. தீபாவளி பண்டிகை, தொடர் விடுமுறை, இ சேவை மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 60 சதவிகிதம் விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீடு செய்திருந்தனர்.

இதனால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்ததது.

மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்தநிலையில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி நவம்பர் 22-ஆம் தேதி வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு: நீதிபதி விலகல்!

ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு நாளை ஒத்திவைப்பு!

ஸ்டான்லி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி : என்ன ஆச்சு?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *