கிச்சன் கீர்த்தனா: கிரிஸ்ப்பி நூடுல்ஸ் சாலட்!

தமிழகம்

சாலட் என்றாலே ஸ்பெஷல்தான். அதிலும் கிரிஸ்ப்பி நூடுல்ஸ் சாலட் ரொம்பவே ஸ்பெஷல்தான். குழந்தைகளுக்குப் பிடித்த இந்த சத்தான சாலட் அனைவருக்கும் ஏற்றது. செய்வதும் சுலபம்.

என்ன தேவை?

பிளைன் நூடுல்ஸ் – தேவையான அளவு
வெல்லம் – அரை கப்
புளிக்கரைசல் – 2 டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலைப்பொடி – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
பிளாக் சால்ட் – ஒரு டீஸ்பூன்
சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

சாலட் செய்ய…

பெரிய‌ வெங்காயம் – அரை கப்
முட்டைகோஸ், கேரட் – தலா அரை கப்
குடமிளகாய் – அரை கப்
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பிளைன் நூடுல்ஸை தனியே வேகவைத்து தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பின், சாலட் செய்யத் தேவையான வெங்காயம், முட்டைகோஸ், குடமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

கேரட் மற்றும் வெல்லத்தை தனித்தனியே துருவி வைத்துக்கொள்ளவும். புளிக்கரைசலை ஒரு கப்பில் எடுத்து வைத்துக்கொள்ளவும். வேக வைத்துள்ள நூடுல்ஸை ஒரு பவுலில், எடுத்துக்கொண்டு அதில் சோள மாவு சேர்த்துக் கிளறவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் நூடூல்ஸை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுக்கவும். பிறகு வேறு ஒரு வாணலியை சூடாக்கி, அதில் துருவிய வெல்லம், புளிக்கரைசல், வறுத்த வேர்க்கடலைப் பொடி, மிளகாய்த்தூள், பிளாக் சால்ட் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

ஒரு பவுலில், பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், முட்டைகோஸ், துருவிய கேரட், குடமிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். பரிமாறும் போது ஒரு தட்டில், நூடூல்ஸை வைத்து, அதன் மேல் கலந்து வைத்திருக்கும் சாலட்டை வைக்கவும். கொதிக்க வைத்த சாஸை, நூடுல்ஸ் மீது ஊற்றிப் பரிமாறவும்.

இட்லி பர்கர்!

தோசை ரோல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *