உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
கடற்கரை – எழும்பூர் வரையிலான 4ஆவது பாதைக்கான பணிகள் நடைபெறுவதால் பறக்கும் ரயில் வழித்தடத்தில் கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சிந்தாரிப்பேட்டை முதல் வேளச்சேரி இடையே அரை மணி நேரத்துக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்தச்சூழலில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதால் மின்சார ரயில்களில் கூட்டம் அதிகரிக்கும்.
எனவே ரயில் பயணிகள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காகச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் அக்டோபர் 8, 13, 18, 23, 27 ஆகிய தேதிகளில் போட்டியைக் காண வரும் ரசிகர்கள் வசதிக்காகச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேளச்சேரியில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் சிந்தாதிரிப் பேட்டைக்கு இரவு 11.15 மணிக்கு வந்து சேரும்.
சிந்தாதிரிப்பேட்டையில் இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு வேளச்சேரிக்கு சென்றடையும்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு: அக்டோபர் 30-க்கு ஒத்திவைப்பு!