கிச்சன் கீர்த்தனா: க்ரீம் ஆஃப் வெஜிடபிள் சூப்

Published On:

| By Selvam

இப்போதெல்லாம் அனைவருக்கும் ஸ்ட்ரெஸ் அதிகமாகிக்கொண்டே போகிறது. ஓய்வின்றி தொடர்ந்து மொபைல் போன்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இந்த நிலையில் கண்களைப் பாதுகாக்க பச்சைக் காய்கறிகள், பருப்புகள், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் நிறைந்த பழ வகைகள், மீன்கள், மீன் எண்ணெய், வெண்ணெய் ஆகியவை கண்களுக்கு மிகவும் நல்லது. அந்த வகையில் கண்களின் ஆரோக்கியத்துக்கான சூப் இது. இந்த சூப்பில் உள்ள காலிஃப்ளவரில் ஒமேகா 3 கொழுப்புச் சத்தும் வைட்டமின் கே சத்தும் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவும்.

என்ன தேவை?

கேரட் – 100 கிராம்
காலிஃப்ளவர் – 100 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
பச்சைப்பட்டாணி – 100 கிராம்
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்
பால் – இரண்டரை கப்
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கறுப்பு மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
தண்ணீர் – 4 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

பீன்ஸையும் கேரட்டையும் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். காலிஃப்ளவரைச் சிறிய பூக்களாக நறுக்கியெடுத்துக்கொள்ளவும். ஃபிரெஷ்ஷான பச்சைப்பட்டாணிகளை எடுத்துக்கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நறுக்கியெடுத்துக்கொள்ளவும். வாணலியில் வெண்ணெய்விட்டு சூடாக்கி, உருகியதும் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, அது பொன்னிறமாகும்வரை வதக்கவும். எல்லா காய்கறிகளையும் போட்டு முக்கால் பதத்துக்கு வேகவிட வேண்டும். சோள மாவைத் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஆக்கிக்கொள்ளவும். காய்கறிகள் வெந்ததும் சோள பேஸ்ட்டைக் காய்கறிகளோடு கலந்துகொள்ளலாம். பிறகு, அதில் கொஞ்சம் கொஞ்சமாய் பாலைச் சேர்க்கவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் கிளறிவிட்டு அடுப்பை `சிம்’மில் வைக்கவும். கொஞ்சம் கெட்டியாகும் வரை `சிம்’மில் வைத்திருக்கவும். ரொம்பவும் கெட்டியாகிவிட்டால் அரை கப் பால் சேர்க்கலாம். இதை சூடாகப் பரிமாற வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: க்ளோ ஸ்கின் லட்டு

கிச்சன் கீர்த்தனா: மினி இட்லி வித் சாம்பார்

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: ரேவதி!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: உத்திரட்டாதி!

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: பூரட்டாதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share